மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் சந்திப்பு

சென்னை : தேமுதிகவுடன் கூட்டணி இழுபறி நீடிக்கும் நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.  சென்னை விமான நிலையம் அருகே உள்ள டிரைடண்ட் ஓட்டலில் பியூஷ் கோயல் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரை  சுதீஷ் சந்தித்தார். கூட்டணி தொடர்பான தனது முடிவை தேமுதிக இதுவரை அறிவிக்காத நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதிமுக - தேமுதிக தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: