உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது...... ஐசிசி திட்டவட்டம்

துபாய்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது என ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட தடை விதிக்கக்கோரிய இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப்படையினர் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதலை அரங்கேற்றியது. இதில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பயங்கவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலுக்கு ஐநா மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதேபோல் இந்த தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனிடையே இந்தாண்டு நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இந்தியா பங்கேற்கக் கூடாது, மீறினால் உயிரிழந்த வீரர்களை அவமானம் செய்தது போல் ஆகும், என கூறி ரசிகர்கள், முன்னாள் இந்திய வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது என ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இரு நாட்டு இடையிலான பிரச்சனையில் ஐசிசி தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது..

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: