ஒசாமா பின்லேடன் மகன் குறித்து துப்பு கொடுத்தால் 1 மில்லியன் டாலர் பரிசு ; அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் குறித்து துப்பு கொடுத்தால் 1 மில்லியன் டாலர் பரிசு தரப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு இரட்டை கோபுரங்கள் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன். பின்லேடன் அமெரிக்க சிறப்பு படையால் பாகிஸ்தானில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராகும் முயற்சியில் ஹம்சா பின்லேடன் ஈடுபட்டு வந்தார்.

தொடர்ந்து கடந்த 4 வருடங்களாக பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்கா மீது தாக்குதல்களை நடத்த ஹம்சா பின்லேடன் வலியுறுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை பற்றிய தகவல்கள் அளிப்போருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஹம்சா பின்லேடன் ஆப்கானிஸ்தான், மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான எல்லை பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்றும், ஈரான் நாட்டில் தஞ்சம் அடையலாம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹம்சா பின்லேடன் சர்வதேச தீவிரவாதி என தெரிவித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி மைக்கல் இவானாஃப், அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு ஹம்சா பின்லேடன் உத்தரவிட்டு ஆடியோ மற்றும் வீடியோக்கள் வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: