கொடைக்கானலில் ஓய்வு பெற்ற நீதிபதி காட்டேஜுக்கும் சீல்வைப்பு

கொடைக்கானல்: ஐகோர்ட் கிளை உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட 258 கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று 2வது நாளாக நடந்த பணியின்போது, கொடைக்கானல் அப்சர்வேட்டரி விஐபி வளாகத்தில் விதிமுறை மீறி கட்டப்பட்டிருந்த ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு சொந்தமான 3 அடுக்கு கட்டிட காட்டேஜ்க்கும் சீல் வைத்தனர். ஒரு வாரத்தில் பணியை முடித்து மார்ச் 11க்குள் ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே சீல் வைப்பு நடவடிக்கையை கண்டித்து நேற்று நடந்த உண்ணாவிரதத்தில் வியாபாரிகள், தொழிலாளர்கள், அனைத்து கட்சியினர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: