அட்டப்பாடி வனத்தில் கஞ்சா செடி அழிப்பு: அகளி போலீசார் அதிரடி

பாலக்காடு: பாலக்காடு அருகே அட்டப்பாடி வனத்தில் பயிரிட்டிருந்த கஞ்சா செடிகளை அகளி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அழித்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப்பகுதியில் கஞ்சா பயிரிட்டுருப்பதாக அகளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் அகளி டி.எஸ்.பி நவநீத்சர்மா, எஸ்.ஐ சுபின் ஆகியோர் தலைமையில் போலீசார் அகளி அடுத்த கோட்டியார்கண்டி மலை பகுதியில் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். கடல் மட்டத்திலிருந்து 1101 அடி உயர மலை பகுதியில் 10 சென்ட் பரப்பளவில் 25 வழித்தடங்களில் பயிரிடப்படிருந்த 60 கஞ்சா செடிகளை வெட்டி தீ வைத்து அழித்தனர்.

இது தொடர்பாக கஞ்சா பயிர் செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 16ம் தேதி அகளி வனப்பகுதியான பூதயார்கண்டி, குள்ளக்காடு மலை பகுதிகளில் பயிரிட்டிருந்த கஞ்சா செடிகளை போலீசார் தீ வைத்து அழித்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: