லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நாளை 91வது ஆஸ்கர் விருது விழா

லாஸ்ஏஞ்சல்ஸ்: திரைப்பட விருதுகளில் மிக முக்கியமானதாக திரையுலகினராலும் ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்படுவது ஆஸ்கர் விருதுகள். 91வது ஆஸ்கர் விருது விழா லாஸ்ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டரில் பிப்ரவரி 24ம் தேதி (நாளை) நடக்கிறது. இந்திய நேரப்படி பிப்ரவரி 25ம் தேதி அதிகாலையில் இந்த விழா நடைபெறும். தி ஃபேவரைட், ரோமா ஆகிய ஹாலிவுட் படங்கள் அதிகபட்சமாக தலா 10 விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஆவண குறும்பட போட்டியில் ‘பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ படம் பட்டியலில் உள்ளது. மாதவிடாய் காலத்தில் இந்திய கிராமத்து பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், கோவையை சேர்ந்த முருகானந்தம் ஏழை பெண்களுக்காக மலிவுவிலை நாப்கின் தயாரித்து புகழ்பெற்றது பற்றி இந்த குறும்படத்தில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: