சென்னை: மார்ச் மாதம் நடக்க உள்ள பிளஸ் 1 தேர்வுக்கு சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் இன்று பிற்பகல் ஹால்டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் மாதம் பிளஸ் 1 பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்து தற்போது தனித்தேர்வர்களாக தேர்வு எழுத சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்துள்ளவர்கள் (தட்கல் உள்பட) இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.