மாணவர்கள் மோதலுக்கு பழிவாங்கல் : குறி தவறி அப்பாவி படுகொலை

நொய்டா: இரண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலுக்கு, விவகாரத்தில் சம்பந்தப்படாத அப்பாவி ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நொய்டாவில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.சுபோத் போத்தி, சோனு யாதவ், அனித் சிங் ஆகிய 3 பேர் மீதும் போலீஸில் ஏராளமான வழக்குகள் உள்ளன. போத்தியின் சகோதரன் 11ம் வகுப்பு படித்து வருகிறான். அவனுக்கும், உடன் படிக்கும் மற்றொரு மாணவனுக்கும் சில நாட்களுக்கு முன் வீண் சண்டை மூண்டது. இருவரும் கடுமையாக மோதிக் கொண்டனர். அப்போது உடன் இருந்தவர்கள் தலையிட்டு தற்காலிகமாக சண்டையை நிறுத்தினர். அப்போது போத்தியின் சகோதரன் மற்றொரு மாணவனை பார்த்து உன்னை பழி தீர்க்கிறேன் பார் என கறுவியுள்ளான்.

அதைத் தொடர்ந்து, தகராறு குறித்து தனது அண்ணன் சுபோத் போத்தியிடம் தம்பியான மாணவன், ஆத்திரம் கொப்பளிக்க முறையிட்டு, பழி தீர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளான். தம்பியை அடித்தவனை பழி தீர்க்கும் வகையில், அந்த மாணவனின் தந்தையான அவ்தேஷை(45), அவர் வேலை பார்க்கும் கிரேட்டர் நொய்டா தபால் அலுவலகத்தில் இருந்து வெளியில் வரும்போது, சுட்டு கொலை செய்ய திட்டம் தீட்டினர்.அதையடுத்து, குறிபார்த்து சுடுவதில் திறமையான அனில் துஜானா தாதா கும்பலை சேர்ந்த ஒருவரையும் ஏற்பாடு செய்து கொண்டார். திட்டத்துக்கு கார் தேவை என்பதற்காக, ஒரு சொகுசு காரை இந்த மாதம் 3ம் தேதி தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து திருடினர். பின்னர், அவ்தேஷை சுட்டுக் கொலை செய்ய, 5ம் தேதியன்று அந்த காரில், கிரேட்டர் நொய்டா தபால் அலுவலகம் அருகே அவர்கள் காத்திருந்தனர்.

அப்போது நீரஜ் என்பவர் தபால் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அவருக்கும், அவ்தேஷுக்கும் உருவ ஒற்றுமை இருந்ததால், அவ்தேஷ் எனக்கருதி, குறிபார்த்து சுடுபவர் அவரை சுட்டு கொலை செய்தார். அதன் பின் அந்த 4 பேரும் தப்பித்தனர்.

இது தொடர்பாக நடத்திய விசாரணைக்குப் பின்னர் துப்பு கிடைக்கப்பெற்ற போலீஸார், சுபாஷ் போத்தி, சோனு யாதவை கைது செய்தனர். அனித் சிங் வேறொரு குற்றத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ளார். அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், குறிபார்த்து துப்பாக்கி சுடும் நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.யாருக்கோ வைத்த குறி தவறி, அப்பாவி பலியானது நொய்டாவில் சோகம் ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: