விமானப்படையில் எந்த நேரத்திலும் தேஜஸ் போர் விமானம் : எச்ஏஎல் நிறுவன தலைவர் மாதவன் தகவல்

பெங்களூரு: இலகு ரக போர் விமானம் தேஜஸ் எந்த நேரத்திலும் விமானப்படையில் சேர்க்கப்படலாம்.  இந்த செய்தி எச்ஏஎல் நிறுவனத்திற்கு மட்டும் இன்றி இதில் இணைந்து பணியாற்றிய அனைத்து நிறுவனங்களுக்கும் பெருமை கிடைத்துள்ளது  என எச்.ஏ.எல். தலைவர் மாதவன் கூறினார்.பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி மற்றும் சாகசம் நடந்து வருகிறது. இதையொட்டி எச்.ஏ.எல். தலைவர் மாதவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய விமானப்படையின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இலகு ரக ஹெலிகாப்டர் தயாரித்து வழங்கி வருகிறோம். கடற்படையின் சார்பில் ஹெலிகாப்டர் இறக்கை மடங்கும் வகையில் தயாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் இறக்கை தேவையான நேரத்தில் மடங்கும் வகையில் புதிய நுட்பத்தை புகுத்தி அதை தயாரித்து வருகிறோம். இந்தியாவின் 20 கிளைகளுடன் 9 இடங்களில் எச்.ஏ.எல். சிறப்பாக செயல்படுகிறது. எச்.ஏ.எல். நிறுவனத்தின் புதிய திட்டங்களுக்கு தேவையான நிதி இருக்கிறது. நிதி பற்றாக்குறை என்பதே கிடையாது. ரபேல் போர் விமானம் தொடர்பாக எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை.  எச்.ஏ.எல் . இதற்கு முன்பு பல்வேறு சாதனை படைத்துள்ளது. தற்போதும் சாதனை படைத்து வருகிறது. திறமை மற்றும் திறன் ஆகிய இரண்டும் எச்.ஏ.எல். நிறுவனத்திடம் அதிகம் இருக்கிறது. இலகு ரக விமானம் தேஜஸ் (எல்சிஏ) அனைத்து தடைகளையும் தாண்டி சாதனை படைத்துள்ளது. விமானத்தை இயக்குவதற்கான சான்றிதழ் கிடைத்து விட்டன. இதைத்தொடர்ந்து விமானப்படையில் இது விரைவில் இடம் பெறும். மார்க் 1 மற்றும் மார்க் 2   என்ற எல்சிஏ விமானங்கள் கடற்படைக்காக தயாரிக்கப்பட்டு வருகின்றன.  மேலும்  சில மாற்றங்களுடன் வெளிநாட்டிற்கு இதை ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.துருவ் ஹெலிகாப்டர் உள்ளிட்ட விமானங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இஸ்ரோவின் சார்பில் எச்.ஏஎல். நிறுவனத்திற்கு பிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிப்பதற்கு ஆர்டர் கிடைத்துள்ளது. அதன்படி 12 பிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிக்கும் பணியிலும் எச்.ஏ.எல்.ஈடுபட்டுள்ளது. எச்.ஏஎல். நிறுவனத்தின் நிதி நிலை மட்டும் இன்றி லாபமும் சீராக இருக்கிறது. இவ்வாறு மாதவன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: