மஹாராஷ்டிராவில் ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய சிறுவன்: பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு

புனே: மகாராஷ்டிராவில் 200 அடி ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய 6 வயது சிறுவனை பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். புனே மாவட்டத்தை அடுத்த தொரண்டலே கிராமத்தைச் சேர்ந்த ரவி பண்டிட் பில் என்ற 6 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது, அருகில் மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தான். பல மணி நேரமாக சிறுவன் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பெற்றோர், அவன் விளையாடிய இடத்தில் தேடினர். அப்போது சிறுவன் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 12 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருந்ததால் கயிறு மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சிறுவனின் உடலில் பலத்த காயங்கள் ஏற்படும் வாய்ப்பு இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. எனவே, தேசிய பேரிடர் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு முதல் காலை வரையாக சிறுவனை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். சிறுவனை மீட்பதற்காக அப்பகுதி மக்கள் ஆழ்குழாய் கிணற்றின் பக்கவாட்டில் பக்கவாட்டில் பள்ளம் தோண்டினர். அந்த பள்ளத்தை மேலும் ஆழப்படுத்தி, சிறுவன் சிக்கியிருந்த இடத்திற்கு அருகில் துளையிட்டு பத்திரமாக மீட்டனர். சுமார் 16 மணி நேரத்திற்குப் பிறகு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: