பத்மநாபபுரம் அரண்மனையில் புதுப்பொலிவுடன் மணி மாளிகை

* 3 கி.மீட்டர் சுற்றளவுக்கு ஒலி கேட்கும்

தக்கலை :  பத்மநாபபுரம் அரண்மனையில் மேற்கெள்ளப்பட்ட பணிகளுக்கான திறப்பு விழா இன்று நடக்கிறது.   பத்மநாபபுரம்  அரண்மனை 14 கட்டிடங்கள் இணைந்ததாகும். கேரள மாநில அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அரண்மனையை பார்வையிட ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  அரண்மனையை ஜ.நா.வின் புராதன சின்னங்கள் பட்டியில் இடம் பெறுவதற்கான பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனிடையே அரண்மனையில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளது.

இதில் குறிப்பாக அரண்மனை உப்பரிகை மாளிகையில்  மணிமாளிகை (கிளாக் டவர்) திறந்து வைக்கப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த மணி கடந்த பல ஆண்டுகளாக இயங்காமல் இருந்தது. இந்த மணியின் ஓசை 3 கி.மீ., சுற்றளவிற்கு கேட்குமாம். இத்தனை புராதனமுடைய மணி சீரமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு வீடியோ காட்சிகள் உள்ளிட்ட பல் வேறு பணிகளுக்கான திறப்பு விழா இன்று (21ம் தேதி) காலை 11.30க்கு நடக்கிறது.

பாறசாலை எம்எல்ஏ ஹரீந்திரன் தலைமை வகிக்கிறார். கேரள மாநில தொல்லியல் மற்றும் துறைமுக துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் திறந்து வைக்கிறார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதில் நெய்யாற்றினகரை எம்எல்ஏ ஆன்சலன், பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏ மனோதங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: