இணைய உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல் போல் பேஸ்புக் செயல்படுகிறது: பிரிட்டன் நாடாளுமன்றக்குழு புகார்

லண்டன்: பேஸ்புக், இணைய உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல் போல் செயல்படுவதாக பிரிட்டன் நாடாளுமன்றக் குழு அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து டேமியன் காலின்ஸ் தலைமையிலான நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தியது. 18 மாத விசாரணைக்குப் பின் தற்போது அந்தக் குழு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் பேஸ்புக் மீது சரமாரியான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. நேற்று நடந்த பிரிட்டன் நாடாளுமன்ற கூட்டத்தில், டிஜிட்டல், கலாச்சாரம், மீடியா மற்றும் ஸ்போர்ட்ஸ் (டி.சி.எம்.எம்.எஸ்) ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவானது, பேஸ்புக் ஆன்லைன் உலகில் டிஜிட்டல் கேங்ஸ்டர் போல நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தவறான தகவல்களை பேஸ்புக் அளித்ததாகவும், விசாரணையை மந்தமாக்கும் வகையில் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டிஜிட்டல் உலகின் கொள்ளைக் கும்பல் போல் பேஸ்புக் செயல்படுவதாகவும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என அவர்கள் தங்களை நினைத்துக் கொள்வதாகவும், இதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கை மூன்று முறை அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால் அவர் இதுவரை ஆஜராகவில்லை. சுமார், 2.32 பில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ள ஃபேஸ்புக், 2017 ஆம் ஆண்டில் 40 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 108 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில், பேஸ்புக் தவறான தகவல்களுக்கு விமர்சனம் செய்வதாகவும், சர்வதேச அளவில் தெரிந்தே தனியுரிமை மற்றும் போட்டி எதிர்ப்பு சட்டங்கள் ஆகிய இரண்டையும் மீறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. தவறான வதந்திகளை பரப்புவோர் கணக்கின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, பேஸ்புக்கின் வணிக நடைமுறைகளை மேலும் விசாரணைக்கு உட்படுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: