அமெரிக்காவில் இருந்து நாள் ஒன்றுக்கு 30 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முதல் ஒப்பந்தம் கையெழுத்து

அமெரிக்கா: அமெரிக்காவில் இருந்து நாள் ஒன்றுக்கு 30 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் வகையிலான முதல் ஒப்பந்தத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இந்தியா ஈரானிடமிருந்தே அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்து வந்த நிலையில், அமெரிக்கா ஈரானுக்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் அங்கிருந்து எண்ணெய் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் டன் அல்லது 60 ஆயிரம் பேரல்களை வாங்கும் வகையில் அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் சிங் தெரிவித்தார். கடந்த ஆகஸ்டில் அமெரிக்க நிறுவனத்துடன் குறுகிய கால ஒப்பந்தமிடப்பட்டு நவம்பர் முதல் ஜனவரி வரை எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: