சப்போட்டாவில் மாவுப்பூச்சி தாக்குதல் நோய்: விவசாயிகள் கவலை

பழநி: பழநி பகுதியில் சப்போட்டா செடியில் வெள்ளை ஈ தாக்குதல் நோய் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பழநி அருகே ஆயக்குடி பகுதியில் அதிகளவில் கொய்யா, நெல்லி, சப்போட்டா, மிளகாய், கத்திரி, பருத்தி, எலுமிச்சை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இவை தமிழகத்தில் திருப்பூர், திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் இச்செடிகளில் மாவுப்பூச்சி மற்றும் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. மேலும் காய்கள் பூச்சி தாக்குதலுக்கு ஆளாகி புள்ளிகள் விழுந்து தகுதியற்றதாகி விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சப்போட்டா மட்டுமின்றி எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட மற்ற காய்களும் இதே பாதிப்பிற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளன. காய்கள் பாதிப்பின் காரணமாக ஆயக்குடி பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். யானை தொந்தரவால் அவதிக்குள்ளான விவசாயிகளுக்கு தற்போது மற்றுமொரு தொந்தரவாய் இந்நோய் தாக்குதல் அமைந்துள்ளது.

இது குறித்து பழநி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆரம்ப கட்டமாக இருந்தால் வேம்பு எண்ணெயை கலந்து அடித்தால் போதுமானது. முற்றிய நிலையில் 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி புரபனோபாஸ் கலந்து அடிக்கலாம். அல்லது 10 லிட்டர் தண்ணீருடன் 6 மில்லி இமியோகுளோபிரிட் கலந்து அடிக்கலாம். அல்லது 1 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் நீட்டோமைல் கலந்து கைப்பம்பு மூலம் அடிக்கலாம். பார்த்தீனிய செடிகளின் மூலமே இப்பூச்சி பரவுவதால் விவசாயிகள் இச்செடிகளை உடன் அகற்றி விட வேண்டும். மேலும், விபரங்களுக்கு பழநி தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாமென தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: