ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மீண்டும் கேப்டன் கோஹ்லி தலைமை பொறுப்பை ஏற்கிறார். இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டி20, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி விசாகப்பட்டணத்தில் வரும் 24ம் தேதியும், 2வது டி20 போட்டி  பெங்களூருவில் வரும் 27ம் தேதியும் நடக்கின்றன. இதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறும்.இவ்விரு தொடர்களுக்கான இந்திய அணி மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதில், நியூசிலாந்து ஒருநாள் தொடரில் 3வது  போட்டியுடன் ஓய்வளிக்கப்பட்ட விராத் கோஹ்லி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இத்தொடரில் 2வது விக்கெட் கீப்பர் இடத்திற்கு தினேஷ் கார்த்திக்கிற்கு பதில் இளம் வீரர் ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார்.  உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் கே.எல். ராகுலுக்கு 3வது துவக்க வீரராக மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுக்குப் பின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

டி20 அணி வீரர்கள் விவரம்;

விராட்கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, விஜய் சங்கர், சாஹல், பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மான்யக் மார்கண்டே

ஒருநாள் போட்டி வீரர்கள் விவரம்;

விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகார் தவான், அம்பாதி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, ஜாஸ்ரிட் பும்ரா, முகம்மது ஷமி, யஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், விஜய் ஷங்கர், ரிஷப் பன்ட், சித்தார்த் கவுல், KL ராகுல்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: