காதலர் தினத்தில் கோஹ்லி, அனுஷ்கா: ட்வீட் கார்னர்

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் தங்களின் 2வது காதலர் தினத்தை நேற்று கொண்டாடினர். இதையொட்டி, காதல் மனைவி  அனுஷ்காவுடன் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கோஹ்லி தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டார். ‘நேற்று இரவு எனது வாலன்டைனுடன்’ என எழுதியிருந்தார்.  அதே  போல, சமீபத்தில் நியூசிலாந்தில் கோஹ்லியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அனுஷ்கா தனது டிவிட்டரில் வெளியிட்டு அன்பை பரிமாறியிருந்தார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: