4 மாதத்தில் லோக் ஆயுக்தா: தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 மாதத்தில் லோக் ஆயுக்தாவை நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் இதுகுறித்து மேலும் காலதாமதம் கூடாது எனவும் மாநில அரசுக்கு நேற்று அறிவுறுத்தியுள்ளது. தமிழகம், புதுவை ஆகிய மாநிலங்களில் லோக் ஆயுக்தா முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என திமுக உட்பட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியது. இதையடுத்து தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அடுத்த 3 மாதத்தில் உருவாக்கி 2019ம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து அமைப்பை கண்டிப்பாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் 24ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சய் கண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே நீதிபதிகள் முன்னிலையில் ஒரு கோரிக்கையை வைத்தார்.  அதில்,”தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை நடைமுறைப்படுத்தும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இருப்பினும் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களை உருவாக்க தேடுதல் குழுவிற்கு 8 வாரமும், இதனை பரிசீலனை செய்து திட்டத்தை செயல்படுத்த தேர்வு குழுவிற்கு 4 வாரம் என மொத்தம் 12 வாரங்கள் அதாவது 3மாதங்கள் மேலும் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

  இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,”தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை உருவாக்குவது தொடர்பாக மாநில அரசு வைத்துள்ள கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இருப்பினும் அடுத்த 4 மாதங்களில் தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஊழல் தொடர்பான வழக்குகளை கையாளக்கூடிய லோக் ஆயுக்தாவை அமைக்க இனியும் காலதாமதத்தை ஏற்படுத்தக்கூடாது என மாநில அரசுக்கு நேற்று அறிவுறுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: