ஐசிசி உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளர் பான்டிங்

மெல்போர்ன்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை தொடர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 5 முறை உலக கோப்பையை முத்தமிட்டிருந்தாலும், தற்போது தொடர் தோல்விகளால் பார்மை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்மித், வார்னர் இருவரும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், உலக கோப்பைக்கான அணியின் துணை பயிற்சியாளராக ரிக்கி பான்டிங் (44 வயது) நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா நேற்று அறிவித்தது. தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர், பேட்டிங் பயிற்சியாளர் கிரீம் ஹிக், தற்காலிக பந்துவீச்சு பயிற்சியாளர் டிராய் கூலி ஆகியோருடன் இணைந்து பான்டிங் செயல்பட உள்ளார். இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2003 மற்றும் 2007ல் உலக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: