பாக். முன்னாள் பிரதமர் கிலானி ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசூப் ராசா கிலானி வெளிநாடு செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசூப் ராசா கிலானி(66). இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு பாங்காங் வழியாக தென்கொரியா செல்லும் விமானத்தில் செல்வதற்காக இருந்தார். இதற்காக கிலானி லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றார். ஆனால் அங்கிருந்த குடியுரிமை அதிகாரிகள், வெளிநாடு செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளோரின் பட்டியலில் கிலானியின் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், அதனால் அவரை அனுமதிக்க முடியாது என்றும் மறுத்துவிட்டனர். இதுகுறித்து கிலானி கூறுகையில், “எந்த காரணமும் இன்றி எனது பெயர் வெளிநாடு செல்வதற்கான தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது பிரதமர் இம்ரான் கானின் அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நடவடிக்கையாகும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: