கத்தார் ஓபன் ஒசாகோ விலகல்

தோஹா: உலகின் முதல் நிலை வீராங்கனை  நகோமி ஒசாகோ காயம் காரணமாக கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக  அறிவித்துள்ளார்.

உலகின் நபர் ஓன் டென்னிஸ் வீராங்கனை  ஜப்பானை சேர்ந்த நகோமி ஒசாகோ. ஜனவரி மாதம் நடைப்பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கு  முன்பு தர வரிசை பட்டியலில் 4வது இடத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு ஓசாகோ தர வரிசைப் பட்டியலில்  முதலிடத்திற்கு முன்னேறினார்.

அதுமட்டுமல்ல கடந்த ஆண்டு  விம்பிள்டென், பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்றார். இப்போது 21வயதாகும் ஒசாகோ உலகின்  முன்னணி வீராங்கனையாக உருவாகியுள்ளார்.

இந்நிலையில் கத்தார் டோட்டல் ஓபன் டென்னிஸ் போட்டிகள்  பிப்.11ம் தேதி முதல் பிப.16ம்தேதி வரை நடைபெற உள்ளது. கத்தார் தலைநகரம் தோஹாவில்  நடைபெறும் இந்தப் போட்டியில் நகோமி ஒசாகாவும் பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கத்தார் ஓபன் ேபாட்டியில் ்இருந்து விலகுவாக ஒசாகோ அறிவித்துள்ளார்.  இதனை கத்தார் டென்னிஸ்  சங்கமும் உறுதி செய்துள்ளது. இதற்கிடையில் முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு ஒசாகோ சிகிச்சை பெற்று வருவாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கத்தார் ஓபனில் பங்கேற்க முடியாமல்  போனதற்காக தனது ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ள ஒசாகா ‘அடுத்த ஆண்டு உங்களை சந்திக்க வருவேன்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதே பிரச்னைக்காக கடந்த ஆண்டு ஹாங்காங் ஓபன் டென்னிஸ் போட்டியிலும் ஒசாகோ பங்கேற்கவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: