திரைப்பட பைரசி, காப்புரிமை மீறல் தொடர்பான சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: திரைப்பட பைரசி, காப்புரிமை மீறல் தொடர்பான சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. திரைப்படங்களை அனுமதியின்றி வீடியோ பதிவு செய்வது, பிரதிகள் எடுப்பது உள்ளிட்டவை சட்டவிரோதமாகும். அனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மேலும் தஞ்சையில் இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பகழகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் பிரசார் பாரதியின் ஒலிபரப்பு கட்டமைப்பு மற்றும் தொலைதொடர்பு மேம்பாட்டிற்கு ரூ.1,054 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிட்பண்ட் மோசடி தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில் சிபிஐ 166 வழக்குகளில் பதிவு செய்துள்ளது என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். சிட் பண்ட் மற்றும் பலகோடி ரூபாய் மோசடியால் பீகார், ஜார்க்கண்ட், அசாமில் முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: