வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர திட்டமில்லை : மத்திய அரசு

புதுடெல்லி : வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் வழி அல்லது மின்னணு வழியில் வாக்களிக்க செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரும் திட்டமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரில் அமலாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த மசோதாவை அனைத்துக் கட்சிகளும் ஆதரிப்பார்கள் என கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இடம்பெறவில்லை. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரத்தின்படி வெளிநாடுகளில் சுமார் 3.10 கோடி இந்தியர்கள் வாழ்கின்றனர்.

இதையடுத்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தேர்தல்களில் வாக்குரிமை பெறும் வகையில் இந்த மசோதா அமைக்கப்பட்டது. இதன்மூலம் அவர்கள் தங்கள் சார்பில் இந்தியாவில் வாக்களிக்க ஒருவரை நியமிக்கலாம் என கூறப்பட்டது. இதற்காக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒருமுறை இந்தியாவிற்கு வந்து தங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா விவரங்களை தம் தொகுதிகளில் பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கான ஓட்டுரிமையிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் வழி, மின்னணு வழியில் வாக்களிக்க வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரும் திட்டமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: