வெலிங்டன்: இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியின் ஆட்டத்தை பார்க்கும்போது, முன்னாள் நட்சத்திர வீரர்களான சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் இம்ரான் கானை நினைவுபடுத்துகிறார் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டி உள்ளார்.இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெலிங்டனில் இன்று நடைபெறுகிறது. இந்த தொடரில் இருந்து விராத் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோஹ்லி குறித்து பயிற்சியாளர் சாஸ்திரி நேற்று கூறியதாவது:கோஹ்லியின் ஆட்டத்திறன் மற்றும் போராட்ட குணத்தை பார்க்கும்போது வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் போன்ற மகத்தான வீரர்களை நினைவுபடுத்துவதாக உள்ளது. இப்படி ஒரு வீரர் கேப்டனாக கிடைத்திருப்பது இந்திய அணி அதிர்ஷ்டம் என்று தான் கூறுவேன்.