சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையின் நடுவே உள்ள பெரியார் சிலையை இடம் மாற்ற நடவடிக்கை: கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சேலம் -  உளுந்தூர்பேட்டை  நெடுஞ்சாலையின் நடுவே உள்ள பெரியார் சிலையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சேலம் கலெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் ஆத்தூரைச் சேர்ந்த செல்வராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், சேலம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சிலை நிறுவப்பட்டது. அந்த சாலை  இரு வழிச்சாலையாக  மாற்றப்பட்டது. பெரியார் சிலை தற்போது சாலையின் நடுவில் உள்ளது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, சாலை நடுவே உள்ள பெரியார் சிலையை அகற்றி, உளுந்தூர்பேட்டை ரயில் நிலைய சந்திப்பில் அமைக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சேலம் உளுந்தூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் இருந்து வேறு பகுதியில் மாற்றியமைப்பதற்காக பெரியார் சிலை அமைப்பு குழுவுடன் வரும் பிப்ரவரி 5ம் தேதிக்குள் சேலம் கலெக்டர் ஆலோசனை நடத்த வேண்டும். பெரியார் சிலை அமைப்பு குழு ஒத்துழைக்கவில்லை என்றால் சிலையை வேறு இடத்திற்கு மாற்றி அதற்கான செலவுகளை பெரியார் சிலை அமைப்பு குழுவிடம் கலெக்டர் வசூலித்துக்கொள்ள வேண்டும். சிலை மாற்றி அமைக்கப்பட்டது குறித்து வரும் 18ம் தேதி  சேலம் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: