ஐசிசி மகளிர் தரவரிசை மந்தனா நம்பர் 1

துபாய்: மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் மந்தனா 751 புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றி உள்ளார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 2 சதம் மற்றும் 8 அரை சதம் விளாசி சூப்பர் பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நியூசிலாந்து அணியுடன் நடந்த தொடரில் சிறப்பாக விளையாடிய மந்தனா, ஒருநாள் போட்டிகளில் தனது 4வது சதத்தை பதிவு செய்ததுடன், மற்றொரு போட்டியில் ஆட்டமிழக்காமல் 90 ரன் விளாசினார்.

ஆஸ்திரேலிய வீராங்கனைகள் எலிஸ் பெர்ரி (681), மெக் லான்னிங் (675) 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளனர். நியூசிலாந்தின் எமி சாட்டர்த்வெய்ட் (669), இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ் (669) அடுத்த இடங்களில் உள்ளனர். அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியா (141), இங்கிலாந்து (123), இந்தியா (122) முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: