பிரேசிலில் அணை உடைந்து வெள்ளம்...... சேற்றில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 99 ஆக அதிகரிப்பு

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் இரும்புத்தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்த விபத்தில், உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.  பிரேசில் நாட்டில் உள்ள  மினாஸ் கெராய்ஸ் மாகாணத்தின் புருமாடின்கோ நகரம் அருகே, ‘வாலே’ என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இரும்புதாது சுரங்கம் உள்ளது. இதன் அருகே நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத அணை இருந்தது.  கடந்த வாரம் சுரங்கம் உள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அருகிலிருந்த பழைய அணை திடீரென உடைந்தது. அதில் இருந்த சேறும் சகதியுமான தண்ணீர், வெள்ளமாக பெருக்கெடுத்து  ஓடியது.

இதில்,  சுரங்க பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த 99 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 300 பேரை காணவில்லை. அவர்களில் 150 பேர் சுரங்க நிர்வாகத்தை சேர்ந்த ஊழியர்கள். மற்றவர்கள் சுரங்கத் தொழிலாளர்கள். அவர்களை மீட்க முழுவீச்சில் மீட்பு பணி நடக்கிறது. இவர்களின் கதி என்னவானது என தெரியவில்லை. இதனால், பலி  எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பிரேசில் நாட்டின் புதிய அதிபராக ஜெய்ர் பொல்சனாரோ சமீபத்தில் பதவியேற்றார். அதன் பிறகு நடந்த முதல் இயற்கை பேரழிவாக இந்த சம்பவம் கருதப்படுகிறது. மீட்பு  பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளுமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: