புதுச்சேரியில் திருமண விழாவிற்கு சென்ற மருத்துவர் வீட்டில் 150 சவரன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியில் மருத்துவர் வடிவேல் என்பவரது வீட்டில் 150 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் வடிவேல் கடலூரில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண விழாவி்ற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 150 சவரன் நகை, ரூ.2 லட்சம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் திருமண விழாவை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மருத்துவர் வடிவேல் பீரோவில் உள்ள நகைகள் கொள்ளைபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் கொள்ளை சம்பவம் குறித்து புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 5-க்கும் மேற்பட்ட குற்றசம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: