ஒவ்வொரு ஐகோர்ட் நீதிபதி முன்பு 4,500 வழக்கு நிலுவை: சட்ட அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: ‘‘ஒவ்வொரு உயர் நீதிமன்ற நீதிபதி முன்பு சராசரியாக 4,500 வழக்குகளும், கீழ் நீதிமன்ற நீதிபதி முன்பு சுமார் 1,300 வழக்குகளும் நிலுவையில் உள்ளன’’ என சட்ட அமைச்சக புள்ளிவிவரங்கள்  தெரிவித்துள்ளன. தேசிய நீதித்துறை புள்ளிவிவர மையத்தின் கணக்குப்படி 2018ம் ஆண்டு இறுதி வரை மாவட்ட மற்றும் கீழ்நிலை நீதிமன்றங்களில் 2.91 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. 24 உயர் நீதிமன்றங்களில் 47.68 லட்சம் வழக்குகள்  நிலுவையில் உள்ளன. அதன் அடிப்படையில் ஒன்வொரு உயர் நீதிமன்ற நீதிபதியின் முன்பு சராசரியாக 4,419 வழக்குகளும், கீழ்கோர்ட் நீதிபதியிடம் 1,288 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

கீழ்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 22,644. ஆனால், தற்போது பணியாற்றுவோர் 17,509. பற்றாக்குறை 5,135. இதேபோல் உயர் நீதிமன்றங்களி–்ல அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 1,079.  தற்போது பணியாற்றுவோர் 695. பற்றாக்குறை 384. கீழ் நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி, உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு, மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர பிரசாத் சமீபத்தில்  வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: