50 ஆண்டு ஆள்வோம் என்றவர்களுக்கு 200 ஆண்டு கால பயம் வந்து விட்டது: டிவிட்டரில் அகமது படேல் கிண்டல்

புதுடெல்லி: ‘‘அடுத்த 50 ஆண்டுகள், பா.ஜ ஆட்சி நடத்தும் என கூறியவர்கள், தற்போது இந்த தேர்தலில் தோற்றால், 200 ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியாது என பயப்படுகின்றனர்’’ என டிவிட்டரில் பா.ஜ தலைவர்கள் பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கிண்டலடித்துள்ளார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த பா.ஜ செயற்குழு கூட்டத்தில் பேசிய, அக்கட்சியின் தலைவர் அமித்ஷா, நாட்டை பா.ஜ கட்சி, 50 ஆண்டுகள் ஆளும் என பேசியதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டிருந்தார். இதை கிண்டல் செய்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், ‘‘எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்தது, பா.ஜ தலைவர்களின் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பயம் வெளிப்படையாக தெரிகிறது. 50 ஆண்டு காலம் ஆட்சியில் இருப்போம் என சில மாதங்களுக்கு முன் அவர்கள் கூறினர்.

ஆனால் இந்த தேர்தலில் தோற்றால், 200 ஆண்டு காலம் ஆட்சிக்கு வர முடியாது என அவர்கள் தற்போது கூறுகின்றனர். அரசியலமைப்பை காக்க வேண்டும் என்ற பொது நோக்குடன், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அரசியல்சாசனத்தை சீர்குலைக்க முயன்றவர்கள், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் திகைத்துப்போய் உள்ளனர்’’ என குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: