பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக மரவள்ளி,மக்காச்சோளம் மூலம் மக்கும் பை தயாரிக்க மானியம்: கள் இயக்கம் வலியுறுத்தல்

சேலம்: தமிழ்நாடு கள் இயக்க கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை வகித்தார். கூட்டத்திற்கு பின் அவர் அளித்த பேட்டி: தமிழக அரசு கடந்த 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு முக்கிய பயிராக கருதப்படுகிறது. இந்த பயிர் அழிவை நோக்கி  சென்று கொண்டிருக்கிறது. இதனை பாதுகாக்கும் வகையில், மரவள்ளி கிழங்கு, மக்காச்சோளம், சோயா மாவு ஆகிய மூலப்பொருட்களை கொண்டு மக்கும் தன்மை கொண்ட பைகளை தயாரிக்க முடியும்.  

இது பாலித்தீன் பைகளை போன்ற தோற்றம் கொண்டது.தமிழகத்தில் ஜவ்வரிசி ஆலைகள் பாதிக்கு மேல் மூடியுள்ளது. இந்த ஆலைகளுக்கு மரவள்ளி கிழங்கு மாவில் இருந்து பை தயாரிப்பதற்கான லைசென்ஸ் மற்றும் மானியம் வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: