திருவொற்றியூர் மண்டலத்தில் 6 லட்சத்தில் கட்டிய உடற்பயிற்சி கூடம் 2 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் அவலம்: அதிகாரிகள் மெத்தனம்

திருவொற்றியூர்:   திருவொற்றியூர் மண்டலத்தில் ₹6 லட்சம் செலவில் கட்டப்பட்ட மாநகராட்சி உடற்பயிற்சி கூடம், 2 ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால், பாழாகி வருகிறது. திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட 2வது வார்டில் வசிக்கும் வாலிபர்களுக்காக கத்திவாக்கம் பஜார் தெரு அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில், கவுன்சிலர் நிதி ₹6 லட்சம் செலவில் நவீன உடற்பயிற்சி கூடம்  கடந்த 2016ம் ஆண்டு கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. ஆனால், இதுவரை இந்த உடற்பயிற்சி கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அங்குள்ள வாலிபர்கள் உடற்பயிற்சி செய்ய இடமில்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே, பூட்டிக் கிடக்கும் உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று அப்பகுதி வாலிபர்கள் பலமுறை மாநகராட்சி  ஆணையருக்கு கோரிக்கை வைத்தனர்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரண்டு வருடங்களாக உடற்பயிற்சி கூடம் பூட்டியே கிடப்பதால், பராமரிப்பின்றி பாழாகி வருகிறது. இதனால், மக்கள் வரிப்பணம் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.  எனவே, உடனடியாக இந்த உடற்பயிற்சி கூடத்தை திறக்க வேண்டும். இல்லையென்றால் மாநகராட்சியை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்று அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அப்பகு இளைஞர்கள் கூறுகையில், ‘‘வாலிபர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மக்கள் வரிப்பணத்தில் இந்த உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இதை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல்  பூட்டியே வைத்துள்ளனர். இதனால், கட்டிடம் பாழாகி வருகிறது. தற்போது, பூட்டி கிடக்கும் இந்த உடற்பயிற்சி கூடம் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் இந்த  வழியாக செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே இந்த உடற்பயிற்சி கூடத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: