தமிழகத்தில் கடந்தாண்டில் 1 லட்சம் பேர் காச நோயால் பாதிப்பு: ஆய்வறிக்கையில் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்தாண்டில் மட்டும் புதிதாக 1.03 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாட்டில் 21.32 லட்சம் பேர் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகப்பட்சமாக 4.10 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டில் மட்டும் புதிதாக 1.03 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தென்இந்தியாவை பொருத்தவரை தமிழகத்தில் தான் கடந்தாண்டில் அதிக பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஆந்திராவில் 91,157 பேரும், கர்நாடகாவில் 83,732 பேரும், தெலங்கானாவில் 52,395 பேரும் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கேரளாவில் குறைவாக 24,535 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: