பாக். உச்ச நீதிமன்றம் உத்தரவு வௌிநாடுகள் செல்ல பிலாவலுக்கு அனுமதி

இஸ்லாமாபாத்,:  பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் புட்டோவும், சிந்து மாகாண முதல்வரும் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. பாகிஸ்தானில் போலி பெயர்களில் 30க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை தொடங்கி, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அவரது சகோதரி பர்யால் தல்பூர் ஆகியோர் ரூ.3,500 கோடியை முறைகேடாக பரிமாற்றம் செய்ததாக அந்நாட்டு புலனாய்வு துறை தெரிவித்தது. இதன் அடிப்படையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கூட்டுக்குழு, இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.இந்த ஊழல் புகாரை தொட ர்ந்து, ஆசிப் அலி சர்தாரி, தல்பூர் ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக  சந்தேகிக்கப்படும் 172 பேரின் பெயர்களும் வெளிநாடு செல்வதற்கான தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலை மறுபரிசீலனை செய்யும்படி அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் புட்டோ, சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா ஆகியோரின் பெயர்களை வெளிநாடு செல்வதற்கான தடை பட்டியலில் இருந்து நீக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. கூட்டுக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பிப்பதாகவும், ஊழலில் இவர்களுக்கு தொடர்பு  குறித்து தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பேசிய தகவல்தொடர்பு துறை அமைச்சர் பாவத் சவுத்ரி, “நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதா அல்லது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா என்பது குறித்து அரசு முடிவு செய்யும்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: