அந்தமானின் நிகோபார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

அந்தமான்: அந்தமானின் நிகோபார் தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம் என்பது தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை 8.43 மணிக்கு நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. கடலில் இருந்து 84 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால், பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இதனால் பீதியடைந்த மக்கள் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கமானது நிகோபார் தீவின் 25 கிமீ சுற்றளவு வரை உணரப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சுனாமி ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால் தற்போது வரை இந்திய வானிலை மையம் சார்பில் அந்தமான் நிகோபார் தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, சுனாமி குறித்து எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் மற்றும் கட்டிடங்களுக்கு சேதம் உண்டானதா என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த வருடம் அந்தமானில் ஏற்படும் முதல் நிலநடுக்கம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: