தமிழகம் உட்பட நாடு முழுவதும் ரூ.3,600 கோடியில் 13 மத்திய பல்கலைகழகம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: தமிழகம் உட்பட நாடு முழுவதும் ரூ.3,600 கோடி செலவில் 13 மத்திய பல்கலைக் கழங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பொருளாதா விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் ரூ.3,600 கோடி செலவில் 13 புதிய மத்திய பல்கலைக் கழகங்கள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் பீகார், குஜராத், அரியானா, இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழகத்தில் தலா ஒரு பல்கலைக் கழகமும், ஜம்மு காஷ்மீரில் 2 பல்கலைக் கழகமும் அமைக்கப்படும். இதற்கான பணிகள் 36 மாதத்திற்குள் முடிக்கப்படும். இதன் மூலம், உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோடு, கல்வி பெறுவதில் நிலவும் ஏற்றத்தாழ்வுக்கு தீர்வு காண உதவும்.

இந்திய ஏற்றுமதி, இறக்குதி வங்கிக்கான (எக்ஸிம்) மூலதன நிதியாக ரூ.6,000 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, 2018-19ம் நிதியாண்டில் ரூ.4,500 கோடியாகவும், 2019-20ல் ரூ.1500 கோடியாகவும் 2 கட்டமாக வழங்கப்படும். மேலும், எக்ஸிம் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.10,000 கோடியில் இருந்து ரூ.20,000 கோடியாக அதிகரிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்து வரும், அசாமின் நுமலிகரிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ஆண்டுக்கு 90 லட்சம் டன் உற்பத்தி செய்யும் விதத்தில் ரூ.22,594 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரே நாளில் வருமான வரி ரீபண்ட்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செலவிடப்படும் நேரத்தை குறைக்க, இ-பைலிங் இணையதளத்தை நவீனமாக்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பிறகு, அதிக வரிபிடித்தத்திற்கான பணத்தை திரும்பப் பெற 63 நாட்களாகிறது. இ-பைலிங் இணையதளத்தில் அடுத்த தலைமுறைக்கான வசதிகளை மேம்படுத்தும் பட்சத்தில், இந்த பணம் ஒரே நாளில் கிடைக்கும். இந்த மேம்பாட்டு திட்டப்பணியை மேற்கொள்ள இன்போசிஸ் நிறுவனத்தை அமைச்சரவை தேர்வு செய்துள்ளது. ரூ.4,241.97 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: