டெல்லியில் வரும் 29ம் தேதி விவசாயிகள் உண்ணாவிரதம் : அய்யாக்கண்ணு பேட்டி

க.பரமத்தி: கடன் தள்ளுபடி கோரி டெல்லியில் 29ம் தேதி விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசு, தேசிய நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்காவிட்டால் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாயிகள் லண்டன் சென்று இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் கோடி கடனுதவி வழங்க கோரிக்கைவிடுக்க உள்ளோம்.  அமராவதி ஆற்றில் மழை வெள்ள காலங்களில் வரும் உபரிநீரை தாதம்பாளையம் ஏரியில் சேமிக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், அரவக்குறிச்சி தொகுதியில் வரும் இடைத்தேர்தல், அல்லது மக்களவை தேர்தல் எதுவாயினும் இப்பகுதி விவசாயிகள் புறக்கணிக்க ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம். மேலும், தேசிய நதிநீர் இணைப்பு, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து வரும் 29ம் தேதி டெல்லியில் 500க்கு மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: