விமான விபத்தில் 15 வீரர்கள் பலி

டெஹ்ரான்: கிர்கிஸ்தான் நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான விமானம், தலைநகரான பிஷ்ஷெக்கில் இருந்து இறைச்சி ஏற்றிக்கொண்டு ஈரான் நோக்கி சென்றது. இந்த விமானத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பயணம் செய்தனர்.   விமானம் அவசரமாக தரையிறங்க வேண்டும் என கூறிய விமானி, அல்போர்ஸ் மாகாணத்தில் உள்ள பாத் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார். அப்போது ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம், அருகில்  இருந்த குடியிருப்பின் சுற்றுசுவரில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பொறியாளர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். மற்ற 15 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை 7  பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: