ராகுலை மிரள வைத்த துபாய் சிறுமி: இத்தனை ஆண்டுகள் செய்யாததையா இனிமேல் நீங்கள் செய்ய போகிறீர்கள்?

துபாய்: ‘‘இந்தியாவில் 80 சதவீத காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் செய்யாத நன்மையையா, இனிமேல் நீங்கள் செய்ய போகிறீர்களா?’’ என ராகுலிடம் 14 வயது சிறுமி கேள்வி கேட்டு மிரள வைத்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக துபாய் சென்றார். துபாய் நாட்டு தலைவர்கள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்களை அவர் சந்தித்து பேசினார். அப்போது பேசிய ராகுல், ‘‘இந்தியா சிறப்பான எதிர்காலத்தை பெறவில்லை, இந்தியாவில் மதவாதம் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இந்த நிலையை மாற்றும்’’ என கூறினார். அதன்பின் 14 வயது வயது தமிழ் சிறுமி ஒருவர், ராகுலிடம் கேள்வி கேட்க கை தூக்கினார். இதைப் பார்த்த ராகுல் அவரிடம் மைக்கை கொடுக்கும்படி கூறினார்.

அப்போது அந்த சிறுமி பேசுகையில், ‘‘இந்தியாவில் மதவாதம் அதிகரித்து விட்டதாக கூறும் நீங்கள், குஜராத் தேர்தலின்போது ஏன் கோயிலுக்கு சென்றீர்கள்?’’ என கேட்டார். இதற்கு பதிலளித்த ராகுல், ‘‘அனைத்து மதத்தினரும் சமம் என்பதை காட்டவே நான் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்கிறேன்’’ என்றார். சிறுமி கேட்ட மற்றொரு கேள்வி ராகுலை மிரள வைத்து விட்டது. ‘‘சுதந்திர இந்தியாவில் 80 சதவீத ஆண்டு காலம் காங்கிரஸ்தான் ஆட்சி செய்தது. அப்போது செய்யாத நன்மையை, நீங்கள் இனிமேல் செய்ய போகிறீர்களா? மோடி பிரதமரான பின்புதான், வெளிநாடுகளில் வசிக்கும் எங்களை போன்றோருக்கு அங்கீகாரம் கிடைத்தது.

எனவே, நீங்கள் மதவாதம் பற்றி பேசாமல், ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என கூறுங்கள். அப்போதுதான் இந்திய மக்கள் சிந்திப்பார்கள்’’ என்றார். துபாயில் உள்ள பாஜ ஆதரவாளர் ஒருவர் தனது மகளிடம் சொல்லிக் கொடுத்து கேள்வி கேட்டதுபோல் இந்த நிகழ்ச்சி இருந்ததால், காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப குழு இந்நிகழ்ச்சியின் நேரலையை நிறுத்திவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: