கொடநாடு எஸ்டேட் வீடியோ விவகாரம் : வழக்கை ஆதாரத்துடன் சந்திக்க தயார் - மேத்யூஸ் பேட்டி

புதுடெல்லி: ‘‘கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான விவகாரத்தில் என் மீது பதியப்பட்டுள்ள வழக்கை சட்டரீதியாக ஆதாரங்களுடன் சந்திக்கத் தயார்’’ என தெகல்கா பத்திரிக்கை முன்னாள் ஆசிரியர் டெல்லியில் மீண்டும் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.  கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் திடீர் தகவல் கொண்ட ஆவணப்படத்தை டெல்லி பிரஸ் கிளப்பில் வைத்து தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் நேற்று முன்தினம் வெளியிட்டார். மேலும் கொடநாடு எஸ்டேட் 5 கொலை மற்றும் ரூ.2ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளை நடந்தது ஆகிய சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னனியில் இருக்கிறார். அதுகுறித்த ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதே குற்றச்சாட்டை வழக்கின் 2வது குற்றவாளியும், கூலிப்படை தலைவனுமான சயனும் பத்திரியாளர்களிடம் குறிப்பிட்டு தெரிவித்தார்.

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கிற்கும் தமக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதையடுத்து தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேதுயூஸ் சாமுவேல் உட்பட 2பேர் மீது சென்னை குற்றவியல் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமூவேல் நேற்று மீண்டும் பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.  அவர் கூறியதாவது: கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு சம்பவத்தில் 2வது குற்றவாளியாக இருக்கும் சயன் மற்றும் கனகராஜ் ஆகிய இருவருக்கும் இடையே இருந்த நெருங்கிய நட்பு என்பது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாக தெரியும். இதனை மறுக்கவே முடியாது. அதுகுறித்த ஆதாரங்கள் உள்ளது.

கனகராஜ் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என பலமுறை சயன் கூறியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதனை ஏற்க மறுத்துள்ளார்.  கொலை,கொள்ளை வழக்கு விவகாரத்தில் கனகராஜ், முரளி,மற்றும் ரம்பா ஆகியோரை மட்டுமே குறிவைத்து விசாரணை அதிகாரிகள் சயனிடம் கேள்வியெழுப்பியுள்ளனர். இதில் சயன் விபத்தில் சிக்கியதே ஒரு மர்மம் தான். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களில் முக்கியமாக பல அமைச்சர்களின் மன்னிப்பு வாக்கு மூலங்கள் கிடைத்துள்ளது.

 கொடநாடு எஸ்டேட்டில் இருந்து கனராஜ் எடுத்து சென்ற அனைத்து ஆவணங்களும் மாயமாகி இருக்கக்கூடும் என தற்போது பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய வரலாற்றில் 5பேர் கொலை வழக்கில் மாநிலத்தின் முதல்வராக இருக்கக்கூடிய ஒருவர் தொடர்பில் இருந்துள்ளது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன். அதேப்போல் ஆதாரங்களையும் விசாரணையின் போது குற்றப்பிரிவின் போலீசாரிடம் கொடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் கொலையாளி என்பதை விரைவில் நிரூபிப்பேன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: