கொல்லம் புறவழிச்சாலை திறப்பு விழாவிற்கு மோடி விரும்பியதால் அவரை அழைத்தோம் : கேரள அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கொல்லம் புறவழிச்சாலையை திறந்து வைக்க பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்ததால் தான் அவரை அழைத்தோம் என கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன் கூறினார்.கேரள மாநிலம் கொல்லத்தில் ₹352 கோடி செலவில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்ேபாது இப்பணிகள் தொடங்கப்பட்டு சமீபத்தில் முடிக்கப்பட்டது. இந்த சாலையை வரும் பிப்ரவரி மாதம் முதல்வர் பினராய் விஜயன் திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த பால த்தை வரும் 15ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் கொல்லத்தில் ₹352 கோடி செலவில் தேசிய ெநடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை வரும் பிப்.2ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டது. முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் திறப்பு விழா நடக்க இருந்தது. இதுதொடர்பாக மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த சாலையை பிரதமர் மோடி திறந்து வைக்க விரும்புவதாக மாநில அரசுக்கு தகவல் வந்தது. அதற்கு நாங்களும் சம்மதித்துள்ளோம். இதன்படி வரும் 15ம் தேதி பிரதமர் மோடி புறவழிச்சாலையை திறந்து வைப்பார் என கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: