நிதி நெருக்கடி என்றால் புதிய நியமனங்கள் ஏன்? : அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: டாக்டர்கள் ஸ்டிரைக்கிற்கு தடை கோரிய வழக்கில், நிதி நெருக்கடி என்றால் புதிய நியமனங்கள் ஏன் என அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளதுமதுரை, கோமதிபுரத்தை சேர்ந்த முகம்மது யூனுஷ் ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அரசு மருத்துவர்கள் எந்தவிதத்திலும் ஸ்டிரைக்கில் பங்கேற்கவும், ஈடுபடவும் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், அரசின் கொள்கை ரீதியாகத்தான் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசு மற்றும் பிறமாநில டாக்டர்கள்  அடிப்படையில் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் அதிகப்படியான அலவன்ஸ் வழங்கப்படுகிறது. நிதி உள்ளிட்ட பிற துறைகளின் ஒப்புதலும் பெற வேண்டியுள்ளது என கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நிதி நெருக்கடி உள்ளதாக கூறுகிறீர்கள். ஆனால், அரசு துறைகளில் புதிய நியமனங்களுக்கான அறிவிப்பு மட்டும் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. எப்படி நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும்? நிதி நெருக்கடி என்றால் புது நியமனங்களை ஏன் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.   பின்னர், அரசு மருத்துவர்கள் கோரிக்கை தொடர்பாக அக்.18ல் நடந்த கூட்டத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சுகாதாரத்துறை செயலர் தரப்பில் அபிடவிட் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜன.10க்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: