புலந்த்சாகர் வன்முறை பஜ்ரங் நிர்வாகி கைது

மீரட்: புலந்த்சாகர் வன்முறையில் காவல் ஆய்வாளர் உட்பட 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில், பஜ்ரங் தள நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். உ.பி மாநிலம், புலந்த்சாகரில் கடந்த மாதம் 3ம் தேதி பசு, கன்று கொல்லப்பட்டு அதன் உடல் பாகங்கள் வீசப்பட்டு கிடந்தன. இதனால், அங்கு வன்முறை வெடித்தது. இதை கட்டுப்படுத்த முயன்ற காவல் ஆய்வாளர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர். இது  தொடர்பாக பஜ்ரங் தள உள்ளூர் அமைப்பாளர் யோகேஷ் ராஜ், அவரது ஆதரவாளர்கள் மற்றும் அடையாளம்  தெரியாத 60 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து, தலைமறைவான யோகேஷ் ராஜை ேபாலீசார்  தேடி வந்தனர். அவர் குர்ஜா பகுதியில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு அந்த இடத்தை சுற்றிவளைத்த போலீசார், அவரை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: