புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்களில் போதை பொருளை தடுக்க சிறப்பு குழு அமைப்பு: தென்மண்டல போதை தடுப்பு பிரிவு இயக்குநர் தகவல்

சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ரிசார்ட் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் போதை பொருள் பயன்படுத்துவதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ேபாதை  பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் புரூனோ தெரிவித்துள்ளார். தென் மண்டல போதை தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2016ம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா பகுதியில் 7 வழக்குகள் பதிவு செய்து 10 பேரை கைது  செய்தனர். அவர்களிடம் இருந்து 3.74 கிலோ கொகைன் மற்றும்  375.9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், கடந்த 2017ம் ஆண்டு 17 வழக்குகள் பதிவு ெசய்து 16 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 327.17 கிலோ கஞ்சா, 750 கிராம் ஹெராயின், 6 கிலோ 362  கிராம் கொகைன் பறிமுதல் ெசய்யப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் 2018ம் ஆண்டு கூடுதலாக 32 வழக்குகள் பதிவு செய்து 6 வெளிநாட்டினர் உட்பட 38 பேரை கைது செயதனர். அவர்களிடம் இருந்து 2,345 கிலோ, 110 கிராம் ஹெராயின், 14.496 கிலோ  கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில், தென் மண்டல  போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்  நிலையங்களில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

 சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்கள், பண்ணை வீடுகளில் அதிகளவில் கொகைன் மற்றும் ஹெராயின் போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதாக தென் மண்டல போதை தடுப்பு பிரிவுக்கு ரகசிய  தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தென் மண்டல போதை தடுப்பு பிரிவு இயக்குநர் புரூனோ கூறுகையில், “ஆங்கில புத்தாண்டு அன்று சென்னையில் போதை பொருட்கள் பயன்படுத்தும் நட்சத்திர ஓட்டல்கள்,  ரிசார்ட்கள், பண்ணை வீடுகளை ரகசியமாக கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தின் மீதும் பயன்படுத்திய  நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போதை பொருட்கள் நடமாட்டம் மற்றும் விற்பனை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: