விண்வெளியில் இருந்து திரும்பிய பின் குழந்தையை போல் நடக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்: சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ

புதுடெல்லி: விண்வெளியில் 197 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி பணியை முடித்து பூமிக்கு திரும்பிய அமெரிக்க விண்வெளி வீரர், குழந்தையை போல் நடைபயிலும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.விண்வெளியில் மிதந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு, அங்கு செயல்படுவது பற்றி பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இல்லாத நிலையில் வாழ்வதற்கும் , எடையற்ற நிலையில் செயல்படுவதற்குமான பயிற்சிகள் செயற்கையாக உருவாக்கப்பட்ட மையத்தில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் பறப்பது போன்ற காட்சிகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், விண்வெளிக்கு சென்று திரும்பிய பிறகு அவர்கள் இயல்புநிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகின்றன.

அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர் ஏஜே டிரூ பியூஸ்டீல். இவர் 197 நாட்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்துவிட்டு தனது குழுவுடன் பூமிக்கு திரும்பினார். விண்வெளி சென்றுவிட்டு திரும்பும் விண்வெளி வீரர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவது வழக்கம். அதேபோல், பியூஸ்டீலுக்கும்  சிகிச்சைகள் வழங்கப்பட்டது. மேலும், அவர் பூமியில் தனது அன்றாட நடைமுறைகளை தொடங்குவதற்கு ஏதுவாக அவருக்கு நடைபயிற்சியும் வழங்கப்பட்டது. இந்த நடைபயிற்சியில் மருத்துவர்கள் உதவியுடன் பியூஸ்டீல் குழந்தையை போல் தத்திதத்தி நடக்கிறார். இந்த வீடியோவை அவரது மனைவி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக பியூஸ்டீன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘197 நாட்கள் விண்வெளியில் இருந்து திரும்பிய பிறகு அக்டோபர் 5ம் தேதி நான் இப்படிதான் நடந்தேன். சமீபத்தில் விண்வெளியில் இருந்து திரும்பிய மற்ற வீரர்கள் நலமாக உள்ளனர்’ என பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: