BMW நிறுவனத்துக்கு ரூ.69 கோடி அபராதம் விதிக்க தென்கொரிய அரசு முடிவு

சியோல்: ஜெர்மனியை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான BMW நிறுவனத்துக்கு 69 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க இருப்பதாக தென்கொரிய அரசு தெரிவித்திருக்கிறது. தென்கொரியாவில் BMW நிறுவன கார்களில் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக தீ பிடித்தன. தென்கொரியாவில் மட்டும் கிட்டத்தட்ட 40 கார்களில் தீ பிடித்ததாக செய்தி வெளியானது.

இந்த சூழலில் 1,72,000 கார்களை திரும்ப பெற்றது. எனினும் இதுதொடர்பான விசாரணை குழுவை அமைத்து தென்கொரிய போக்குவரத்து துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. அதில் BMW நிறுவனம் தவறை மறைக்க முயற்சி செய்ததாகவும் வாகனங்களை திரும்ப பெறும் நடவடிக்கையையும் தாமதித்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: