ரஷ்யாவில் சுரங்க கட்டுமானப்பணியில் தீ விபத்து : 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ரஷ்யா : ரஷ்யாவில் சுரங்க கட்டுமானப்பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் உள்ள சாலிகாமஸ் என்ற நகரில் உரல்களி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பூமிக்கு கீழே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அங்கு சுரங்கப்பணியின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் இருந்து 9 தொழிலாளர்கள் தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பூமிக்கு கீழே சுமார் 360 மீட்டர் ஆழத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் உடனடியாக தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் திணறினர். மேலும் உயிரிழந்த 9 தொழிலாளர்களின் உடல்கள் 360 மீட்டர் ஆழத்திலிருந்து மீட்க தாமதமானது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பூமிக்கு கீழே கட்டுமானப் பணிகள் நடைபெறும் போது உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவில் கடந்த 2016ம் ஆண்டு இதேபோல சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 36 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: