டெல்லியில் சுஷ்மா - வாங் யி பேச்சு: 10 துறையில் ஒத்துழைப்பு இந்தியா - சீனா முடிவு

புதுடெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில், 10 துறைகளில் ஒத்துழைக்க முடிவு செய்யப்பட்டது.  டோக்லாம் பிரச் னையை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் யுகான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் மூலம், இருநாட்டு உறவில் புதிய அத்தியாயம் பிறந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் அர்ஜென்டினாவில் நடந்த ஜி-20 மாநாட்டின் போது இருவரும் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நேற்று 4 நாள் பயணமாக இந்தியா வந்தார். அவர் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை டெல்லியில் சந்தித்து பேசினார்.

அப்போது, இருநாடுகளுக்கும் இடையேயான கலாசாரம், இருநாட்டு மக்கள் உறவு உட்பட 10 துறைகளில் ஒத்துழைப்பது தொடர்பாக ‘10 தூண்கள் ஒத்துழைப்பு’ பேச்சுவார்த்தையை நடத்தினர். பின்னர், இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது,  வாங் யி கூறுகையில், ‘‘சுஷ்மா சுவராஜுடன் நடத்திய சந்திப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது’’ என்றார். சுஷ்மா கூறுகையில், ‘வாங்குடன் நடத்திய 2 மணி நேர பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. இருநாடுகள் இடையே கலாசார பரிமாற்றம், சினிமா, தொலைக்காட்சி தொடர்பான இரு தரப்பு ஒத்துழைப்பு,  அருங்காட்சியக நிர்வாகத்தில் ஒத்துழைப்பு, விளையாட்டு, வீரர்கள் பரிமாற்றம், சுற்றுலாத் துறை, பாரம்பரிய மருத்துவ முறை, யோகா, கல்வி ஆகிய 10 திட்டங்களில் ஒத்துழைப்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: