ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து நரேந்திர மோடியை காங். எழுப்பிவிட்டது: ஜிஎஸ்டி பற்றி ராகுல் கிண்டல்

புதுடெல்லி: ‘‘ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து பிரதமர் மோடியை காங்கிரஸ் எழுப்பி விட்டது’’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் டிவிட்டரில் கிண்டல் செய்துள்ளார். ஜிஎஸ்டி திட்டம் குறித்து மும்பையில் சில நாட்களுக்கு முன் பேசிய பிரதமர் மோடி, ‘சாதாரண மக்கள் பயன்படுத்தும் 99 சதவீத பொருட்களை, ஜிஎஸ்டி.யில் 18 சதவீத வரி விதிப்புக்கு கீழ் வருவதற்கான பணிகள் நடந்து  கொண்டிருக்கிறது. சொகுசு பொருட்கள் சிலவற்றுக்கு மட்டுமே இனி 28 சதவீத வரி விதிக்கப்படும்’ என குறிப்பிட்டார்.

இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், ‘இறுதியில் பிரதமர் நரேந்திர மோடியை ஆழ்ந்த தூக்கத்திலிருந்து காங்கிரஸ் எழுப்பி விட்டது. ஜிஎஸ்டி.யில், 99 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி  விதிப்புக்கு கீழ் கொண்டு வரப்படும் என கூறியுள்ளார். இதே கருத்தை காங்கிரஸ் முன்பு கூறியபோது. ‘மிகப்பெரிய முட்டாள்தனமான சிந்தனை’ என மோடி கூறினார். தற்போது இதை அமல்படுத்த பிரதமர் மோடி விரும்புகிறார்.  செய்யாமல் இருப்பதைவிட, தாமதமாக செய்வது சிறந்தது மோடி ஜி’ என குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: