காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடரும் வறட்சி: சுமார் 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் கருகத் தொடங்கின

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பலன் தராமல் கருக தொடங்கியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மதுரமங்கலம், ஏகனாபுரம், எடையார்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் பயிர்கள் கருக தொடங்கிவிட்டன. கதிர்கள் இல்லாததால் நெற்பயிர்கள் கால்நடைகளுக்கு தீவனமாக மாறியுள்ளன.

இதனால் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். இதற்கிடையே ஏரிகளில் தண்ணீர் இல்லாததே வறட்சிக்கு காரணம் என்று ஸ்ரீபெரும்புதூர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சில ஏரிகள் ஒருமுறை கூட தூர்வாரப்படவே இல்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாகும். வறட்சி தொடர்வதால் தங்களுக்கு நிவாரணமும், பயிர் காப்பீட்டு தொகையும் விரைந்து கிடைக்க நடவடிக்கை தேவை என்பது விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: