வோகோ நிறுவனத்தில் ரூ.710 கோடி முதலீடு செய்யும் ஓலா

டெல்லி: இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனமான வோகா நிறுவனம் தன்னுடைய ஸ்டார்ட் அப்பை ஓலாவுடன் பகிர்ந்து கொள்ள முன் வந்துள்ளது. இதையடுத்து ஓலா நிறுவனம் 100 மில்லியன் டாலரை  வோகா நிறுவனத்தில் முதலீடு செய்யவுள்ளது. ஓலா நிறுவனம் தன்னுடைய வணிக எல்லைகளை அதிகரிக்கவே வோகாவுடன் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வோகா நிறுவனம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் தன்னுடைய சேவைகளை வழங்கி வருகிறது. நிமிடத்திற்கு ஒரு ரூபாய் 20 காசுகள் என்ற அடிப்படையில் வோகோ மூலம் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்துச் செல்ல முடியும்.

இந்த முதலீட்டு பணத்தைக் கொண்டு  1,00,000 இருசக்கர வாகனங்களை வாங்கி தன்னுடைய் போக்குவரத்தை மேம்படுத்த உள்ளது. தற்போது 1,00,000க்கும் அதிகமான பயனாளர்கள் இந்த இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவதாக கூறியுள்ளது. வோகாவில் முதலீடு செய்வதால் ஸ்மார்ட்டான மல்டி மாடல் நெட்வொர்க்கை உருவாக்க முடியும்.  நாட்டின் முதல் மற்றும் கடைசி மைல் வரை இணைக்க முடியும் என்று இணை நிறுவனரான பவிஷ்கர் அகர்வால் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக இரு நிறுவனங்களும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. ஓலா செயலியில் வோகோ நிறுவனத்துக்கான அம்சங்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: